வில்லியனூரில் இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை

வில்லியனூரில் குடும்ப தகராறில் இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூரில் இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை
Published on

வில்லியனூர்:

வில்லியனூர் தெற்குமாட வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காயத்திரி (வயது22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கிடேயே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த காயத்திரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை காயத்திரி பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி கண்ணதாசன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56), டெய்லர். இவருக்கு அஞ்சலாட்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தினால் ஆறுமுகத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நோய் கொடுமை அதிகமானதால் விரக்தி அடைந்த ஆறுமுகம் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் ஏட்டு சக்திமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com