சொகுசு காருக்குள் இளம்பெண்ணுடன் விபசாரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

கன்னியாகுமரியில் சொகுசு காருக்குள் இளம்பெண்ணுடன் விபசாரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் என்பதால் எப்போதும் சொகுசு கார்கள் வந்த வண்ணம் இருக்கும். இவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அணிவகுத்து நிற்கும். இதனால் இக்கார்களை யாரும் அதிகமாக கண்டு கொள்வதில்லை.

இதுபோல நேற்று கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் பகுதியில் ஒரு சொகுசு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. காருக்கு வெளியே 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். காருக்குள் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும் இருந்தார். அப்போது சாமிதோப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.

அவரை காருக்கு அருகில் நின்ற வாலிபர்கள் அழைத்தனர். அவர்கள் காருக்குள் இளம்பெண் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவருடன் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறினர்.

இதை கேட்டதும் அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் சொகுசு காரை கண்டுபிடித்து அதில் இருந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவருடன் நின்ற 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

கைதான வாலிபர்களில் ஒருவர் வடக்கு வள்ளியூரை சேர்ந்த பீட்டர் மார்ட்டின் (வயது 35), செங்குளம் மேலூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் ஆவர்.

கைதான பீட்டர் மார்ட்டின், லட்சுமணன் ஆகியோரிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மீட்கப்பட்ட இளம்பெண்ணை போலீசார் நாகர்கோவில் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இளம்பெண்ணை விபசாரத்திற்கு அழைத்து வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நேற்று கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com