உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் முதல் வெளிநாட்டு பயணமாக மியான்மர் செல்கிறார்

உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் சர்வதேச அமைதி மற்றும் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருகிற 5ம் தேதி மியான்மர் செல்கிறார்.
உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் முதல் வெளிநாட்டு பயணமாக மியான்மர் செல்கிறார்
Published on

லக்னோ:

உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் தனது முதல் வெளிநாட்டு பயணமாக மியான்மர் நாட்டிற்கு செல்கிறார். அவரது பயணம் குறித்து முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வருகிற 4ம் தேதி புதுடெல்லி செல்லும் அவர், அங்கு நடைபெறும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அடுத்த நாளான 5ம் தேதி நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் அன்று மாலை மியான்மர் புறப்பட்டுச் செல்கிறார்.

மியான்மரில் நடைபெற உள்ள சர்வதேச அமைதி மற்றும் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்கும் அவர், 7ம் தேதி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com