

பீஜிங்:
சியோமி ரெட்மி நோட் 5A சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 5A வெளியீட்டு தேதியினை சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 21-ம் தேதி வெளியிடப்படும் என்றும் புதிய ரெட்மி நோட் 5A இரண்டு வித மாடல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு மாடல்களும் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும், உயர் ரக மாடலில் மட்டும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 5A பேசிக் மாடல் ஏற்கனவே விற்பனையாகி வரும் ரெட்மி 4A மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
சியோமி ரெட்மி நோட் 5A:
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ்.
- 3000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி நோட் 5A பிரைம் / ப்ரோ:
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 13 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ்.
- 3000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி நோட் 5A சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீன நேரப்படி ஆகஸ்டு 21-ம் தேதி இரவு 7.30 (இந்திய மதிப்பில் மாலை 5.00 மணி) மணிக்கு துவங்குகிறது. புதிய சியோமி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் இதர தகவல்களை அறிந்து கொள்ள ஆகஸ்டு 21-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.