சான்றளிக்கும் தளத்தில் சிக்கிய ரெட்மி நோட் 5: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீன தளத்தில் காணப்பட்ட நிலையில், சான்றளிக்கும் தளத்தில் இதே ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
சான்றளிக்கும் தளத்தில் சிக்கிய ரெட்மி நோட் 5: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்
Published on

சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக MET7 / MEE7 என்ற குறியீட்டு பெயர்களில் சீன தளத்தில் காணப்பட்டது. ஃபுல்-ஸ்கிரீன் 18:9 டிஸ்ப்ளே, யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு, கேமரா பம்ப் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டிருந்தது.

பெயர் அறியப்படாத நிலையில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களுடன் சான்றளிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 5 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் பிராசஸர் சார்ந்த தகவல்கள் மர்மமாகவே உள்ளது. எனினும் 18:9 அளவு பெரிய திரை கொண்டிருப்பதால் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை விட பெரியதாக இருக்கும் என எதிர்ப்ராக்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் 2160x1080 பிக்சடல் ஃபுல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஎச் பேட்டரி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com