

புதுடெல்லி:
சியோமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ரெட்மி 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒரே மாதத்தில் பத்து லட்சம் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிளாஷ் விற்பனை மற்றும் முன்பதிவு விற்பனைகளில் ஒரே மாதத்தில் பத்து லட்சம் ரெட்மி 4 விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், சியோமியின் முந்தைய சாதனைகளை அந்நிறுவனமே முறியடித்துள்ளது.
இந்தியாவில் ரெட்மி 4 இந்தியாவில் ரூ.6,999 முதல் துவங்குகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.8,999 மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே மாதம் வெளியிடப்பட்ட ரெட்மி 4 அமேசான் மற்றும் சியோமியின் Mi.com தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரெட்மி 3S இந்தியாவில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவில் ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போனாக இருந்தது. இதேபோல் சீனாவில் வெளியிடப்பட்ட எம்.ஐ. மேக்ஸ் இதுவரை முப்பது லட்சத்திற்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சியோமி ரெட்மி 4 சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 4100 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
இந்தியாவில் ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் அடுத்த பிளாஷ் விற்பனை ஜூலை 4-ந்தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த விற்பனை அமேசான் மற்றும் சியோமி இணையத்தளங்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.