கருங்குருவிகள் இறப்பு- ஸ்காட்லாந்தில் உசுட்டு வைரஸ் எச்சரிக்கை!

நோய்த்தொற்றுள்ள கொசு ஒரு மனிதனையோ அல்லது விலங்கையோ கடிக்கும்போது உசுட்டு வைரஸ் பரவுகிறது.
Usutu Virus Alert
Published on

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோவிற்கு தென்மேற்கே உள்ள ஆரன் தீவில் கருங்குருவிகள் விசித்திரமான அறிகுறிகளுடன் செத்து மடிவதை அங்கு வசிக்கும் மக்கள் கண்டனர்.

கருங்குருவி இறப்புக்கு உசுட்டு வைரஸ் தாக்குதல்தான் காரணம் கண்டறியப்பட்டது. இந்த உசுட்டு வைரஜ் கொசுக்களால் பரவுக் கூடியதாகும். இந்த உசுட்டு வைரஸ், முதன் முதலாக 1959-ல் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இவை தற்போது ஸ்காட்லாந்தில் பரவி வருகிறது

இந்நிலையில் உசுட்டு வைரசை பரப்பும் பழுப்பு-சாம்பல் நிற கியூலெக்ஸ் பிபியன்ஸ் கொசுக்களையும் அதன் மூலமாக நோய் பரவல் பற்றியும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உசுட்டு வைரஸ் குறித்து ஸ்காட்லாந்தின் தொற்றுநோய் நிபுணர் ஹீதர் பெர்குசன் கூறுகையில்:-

* கொசுக்கள் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமல்லாமல், அவற்றின் உள்ளே வைரஸ் பெருகுவதற்கும் வெப்பமான சூழல் தேவைப்படுகிறது.

* நோய்த்தொற்றுள்ள கொசு ஒரு மனிதனையோ அல்லது விலங்கையோ கடிக்கும் போது வைரஸ் பரவுகிறது.

* இந்த வைரஸ் பொது சுகாதாரத்திற்கு உடனடி அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை.

* தற்போதைக்கு இந்த நோய்கள் பறவைகளுக்கு ஏற்படுத்தும் தாக்கமே மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது. ஆனால் இவை எதிர்காலத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.

* முன்னதாக இந்த உசுட்டு வைரஸ் ஐரோப்பா முழுவதும் கருங்குருவிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியுள்ளது.

* மேலும் இந்த வைரஸ் ஆந்தைகள், கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும் பல வகைப் பறவைகளையும் தாக்குகிறது என ஸ்காட்லாந்தின் தொற்றுநோய் நிபுணர் ஹீதர் பெர்குசன் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com