மடகாஸ்கரில் சோகம் - கப்பல் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி

மடகாஸ்கர் கடற்கரை அருகே கப்பல் மூழ்கியதில் 60க்கும் அதிகமானோரை காணவில்லை.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on: 

அன்டநானரிவோ:

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 68 பேரை காணவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து சென்றது. கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டனர். உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விசாரணையில், கப்பலில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் உள்ளே புகுந்ததன்  காரணமாக  கவிழ்ந்து இருக்கலாம் என்றும், சரக்குகளை கொண்டு செல்லக்கூடிய கப்பலில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com