search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டனி பிளிங்கன்
    X
    ஆண்டனி பிளிங்கன்

    அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இந்தியா மற்றும் குவைத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறையாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று கூறுகையில், டெல்லியில் வரும் 28-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை பிளிங்கன் சந்தித்துப் பேசுவார். 

    அப்போது, கொரோனா தொடர்பான தொடர்ந்த ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் கூட்டுறவு, பிராந்திய பாதுகாப்பு விஷயங்கள், ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்பான இருதரப்பு நலன்கள் ஆகியற்றுடன் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாகவும் பிளிங்கன் விவாதிப்பார்.

    அவர் அன்றைய தினமே டெல்லியில் இருந்து குவைத் சிட்டிக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு அவர் குவைத் உயரதிகாரிகளுடன் பேசுவார். அதன்பின் அவர் 29-ம் தேதி வாஷிங்டன் திரும்புவார் என தெரிவித்தார்.
    Next Story
    ×