

கபாலா :
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவின் ஜிதுராய்-ஹீனா சித்து ஜோடி 7-6 என்ற கணக்கில் ரஷியா இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
பிரான்ஸ் அணி வெண்கலப்பதக்கத்தை பெற்றது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஜிதுராய் 12-வது இடமும், ஹீனா சித்து 9-வது இடமும் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார்கள்.