உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக கையாளவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்
Published on

கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இவர்கள் திகழ்ந்தனர். இதனால் இந்த ஜோடி இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.

குல்தீப் யாதவ் 10 போட்டிகளில் 7-ல் மட்டுமே இடம்பிடித்து 6 விக்கெட் வீழ்த்தினார். சாஹல் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இருவர்களையும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அணி நிர்வாகம் சிறப்பாக பயன்படுத்தவில்லை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் வார்னே, முத்தையா முரளீதரன், அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் இல்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தரனமான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடிய ஒரே அணி இந்தியாதான். அவர்கள் நமக்கு வெற்றியை தேடி தந்திருக்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com