இப்படியும் ஒரு சோதனை- 2-வது இடத்திற்காக இங்கிலாந்து, பெல்ஜியம் விளையாடுமா?
‘ஜி’ பிரிவில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் மூலம் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து 8 கோல்கள் அடித்துள்ளது. 2 கோல்கள் வாங்கியுள்ளது. பெல்ஜியமும் அதேபோன்றுதான். இரு அணிகளுக்கு இடையிலான மஞ்சள் அட்டை வாங்கிய வித்தியாசம் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்துள்ளன.
இன்றைய போட்டி டிராவில் முடிந்தால் இங்கிலாந்து முதல் இடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது. பெல்ஜியம் 2-வது இடம்பிடிக்கும். ஆனால் ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் அடுத்த சுற்றுகள் கடினமாக இருக்கும். அதேவேளையில் 2-வது இடம் பிடித்தால் எளிதாக இருக்கும் வகையில் அட்டவணை உள்ளது.
இங்கிலாந்து, பெல்ஜியத்தில் 2-வது இடம் பிடிக்கும் அணி நாக்அவுட் சுற்றில் கொலம்பியா, ஜப்பான் அல்லது செனகல் அணியை எதிர்கொள்ள வேண்டும். காலிறுதியில் சுவிட்சர்லாந்து அல்லது ஸ்வீடனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரையிறுதியில் ஸ்பெயின், ரஷியா, குரோசியா அல்லது டென்மார்க் ஆகியவற்றில் ஒரு அணியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

