மூங்கில்துறைப்பட்டு அருகே ரத்தக் காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி

மூங்கில்துறைப்பட்டு அருகே ரத்தக்காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே ரங்கப்பனூரில் உள்ள குளம் அருகில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் வடபொன் பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பிணமாக தொங்கிய வாலிபரின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. இதனால் யாரேனும் அவரை அடித்து கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கில் தொங்கிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் அருண் (வயது 28) என்பதும், தொழிலாளியான இவருக்கு 8 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி பாரதி(26) என்ற மனைவியும், பச்சையம்மாள்(5) என்ற மகளும், லோகேஸ்வரன்(3) என்ற மகனும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அருண் மரத்தில் ரத்தக் காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதையடுத்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அருண் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை யாரேனும் அடித்து கொலை செய்து மரத்தில் தொங்க விட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரத்தக்காயங்களுடன் மரத்தில் தொழிலாளி பிணமாக தொங்கிய சம்பவத்தால் ரங்கப்பனூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com