பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவை வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்
Published on

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) பதம் பார்த்தார். இருப்பினும் ஆஸ்டாபென்கோவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவை சாய்த்தார். இந்த பிரிவில் பிளிஸ்கோவா, வீனஸ் வில்லியம்ஸ் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தனர். ஆஸ்டாபென்கோ, முகுருஜா தலா ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் வெளியேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com