கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகள் கைது

தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைதான இலங்கை அகதிகள்
கைதான இலங்கை அகதிகள்
Published on

தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 பெண்கள் உள்பட 6 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த சுதாகர் (வயது40). இவரது மனைவி சந்திரமதி (36), மகன் ஹரிஸ்கரன் (10), உதயகுமார் (40) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீ‌ஷன் (42), அவரது மனைவி திலக்சனா (31) என தெரியவந்தது. கடந்த 2013-ம் ஆண்டில் அகதிகளாக வந்த இவர்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தங்கி இருந்தனர்.

தற்போது இவர்கள் 6 பேரும் இலங்கை திரும்ப முடிவு செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏஜெண்டை அணுகி உள்ளனர்.

அந்த ஏஜெண்டு கூறியபடி கள்ளத்தோணி மூலம் இலங்கை செல்வதற்காக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்தனர். அங்கு கள்ளத்தோணி வர தாமதமானதால் 6 பேரும் போலீசில் சிக்கினர்.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com