திருவொற்றியூரில் தீ மிதித்த பெண் தவறி விழுந்து பலி

திருவெற்றியூரில் நடந்த கோவில் திருவிழாவில் தீ மிதிக்க சென்ற ஒருவர் பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவொற்றியூரில் தீ மிதித்த பெண் தவறி விழுந்து பலி
Published on

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ள காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். மாட்டு வண்டி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (45). திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளையை யொட்டி தீமிதி விழா நடந்தது.

அப்போது தீ மிதித்த மல்லிகா நெருப்பில் தவறி விழுந்தார். இதனால் உடல் கருகி பலத்த காயம் அடைந்தார். அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com