பீகார் துணை மருத்துவர் தேர்வில் மாணவிகளின் ஆடைகளை கிழித்து ஆசிரியைகள் அத்துமீறல்

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற துணை மருத்துவர் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் ஆடைகளை, ஆசிரியைகள் கத்தியால் கிழித்த சம்பவம் நடந்துள்ளது. #Biharparamedicalexam #Candidatessleevescut
பீகார் துணை மருத்துவர் தேர்வில் மாணவிகளின் ஆடைகளை கிழித்து ஆசிரியைகள் அத்துமீறல்
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் உள்ள துணை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தேர்வெழுதினர்.

இந்நிலையில், முசாபர்நகரில் தேர்வெழுத சென்ற மாணவிகளிடம், அங்கு பணியில் இருந்த ஆசிரியைகள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளின் உடைகளில் இருந்த கைப்பகுதிகளை நீக்கினால் மட்டுமே அவர்களை தேர்வெழுத அனுமதிக்க முடியும் என ஆசிரியைகள் கூறியுள்ளனர்.

இதற்கு மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஆசிரியைகள் அனைவரின் முன்னிலையிலும் கத்தியால் மாணவிகள் உடையில் இருந்த கைப்பகுதியை வெட்டி எடுத்துள்ளனர். 

இதேபோல மாணவர்களின் சட்டையையும் கழற்றுமாறு கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Biharparamedicalexam #Candidatessleevescut

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com