ஆண்களைவிட பெண்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்: புதிய ஆய்வில் தகவல்

ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.
ஆண்களைவிட பெண்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்: புதிய ஆய்வில் தகவல்
Published on

நியூயார்க்:

மறதி நோயான ‘அல்சமீர்’ நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43,034 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுறுசுறுப்பு, ஒரு வி‌ஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில் ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.

பெண்களின் முன்பக்க மூளை பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது பச்சா தாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர்.

அதே போன்று பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின் போது மன அழுத்தம், தூக்க மின்மை, உணவு சாப்பிடுவதில் சீரற்ற தன்மை, கவலை எழுதல் போன்றவற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மொத்தத்தில் ஆண்களை விட பெண்களின் முளை அதிக சுறுசுறுப்புடன் இயங்குகிறது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com