அரூர் அருகே அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

அரூர் அருகே அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

அரூர் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. உடலை வாங்க யாரும் வராததால் போலீசார் அடக்கம் செய்தனர்.
Published on

அரூர்:

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருக்கம்பட்டியில் இருந்து, காரப்பாடிக்கு செல்லும் வனப்பகுதியில், அங்குள்ள மரத்தில், தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். 

இறந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனதால், அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் அளித்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு அரூர் போலீசார் சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மருக்கலாம்பட்டியை சேர்ந்த சந்தானத்தின் மனைவி ஜெயா (வயது 49) என்பதும், அவர் ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

ஜெயாவின் உடலை கேட்டு உறவினர்கள் யாரும் வராததால் போலீசார் அவரது உடலை அரூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com