

திருச்சி:
திருச்சி மண்ணச்நல்லூர் அருகே திருவேங்கடபதியை சேர்ந்தவர் செல்வபெருமாள். இவரது மனைவி சித்ரா (42), பூ வியாபாரி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து உறையூர் இந்திரா நகரில் வசித்து வந்தார்.
தனிமையில் இருந்து வந்த அவருக்கு வாழ்வில் விரக்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். பின்னர் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிறி உயிரிழந்தார்.
இது குறித்து உறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.