நெ.1 டோல்கேட் அருகே வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி பிணம்: போலீசார் விசாரணை

நெ.1.டோல்கேட் அருகே வாய்காலில் மிதந்து வந்த மூதாட்டி பிணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெ.1 டோல்கேட் அருகே வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி பிணம்: போலீசார் விசாரணை
Published on

நெ.1.டோல்கேட்:

திருச்சி நெ.1.டோல்கேட் அருகே உள்ளது அப்பாதுரை கிராமம். இந்த கிராமத்தில் அய்யன் வாய்க்கால் உள்ளது. தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதால் இந்த வாய்காலில் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக அய்யன் வாய்க்காலுக்கு சென்றனர். அப்போது வாய்க்காலில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் பிணம் மிதந்து வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சமயபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரும் தள்ளி விட்டு கொலை செய்தார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com