

பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த இரண்டாம்கட்டளை ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (60). மருந்து கம்பெனி பிரதிநிதியாக பணிபுரிந்த ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்கள் நேற்று மாலை கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த வாலிபர் ஜெயஸ்ரீ கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினான். இதில் ஜெயஸ்ரீ கீழே விழுந்தார்.
தப்பி ஓடிய வாலிபரை அசோக்குமார், பொதுமக்கள் விரட்டி சென்றனர். ஆனால் அவன் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பி விட்டான். கீழே விழுந்ததில் ஜெயஸ்ரீ காயம் அடைந்தார்.
வாலிபர் செயின் பறிக்கும் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
வண்ணாரப்பேட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் மேனகா. உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரும்பாக்கம் ஜெய் நகர் அருகில் உள்ள வீனா கார்டன் வள்ளுவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மேனகா அணிந்திருந்த 13 சவரன் செயினை பறித்து மின்னல் வேகத்தில் சென்றனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews