அய்யம்பேட்டை அருகே பட்டதாரி பெண் மாயம்

அய்யம்பேட்டை அருகே பட்டதாரி பெண் மாயமான சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மாயம்
பெண் மாயம்
Published on

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே வையச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். கூலி தொழிலாளி. இவரது மனைவி மங்களம்.

இவர்களது மகள் வினோதினி (வயது 22). இவர் தஞ்சையிலுள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி காலை கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும், அதனை வாங்கி வருவதாகவும் வீட்டில் பெற்றோரிடம் சொல்லி விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து வினோதினி தாயார் மங்களம் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பட்டதாரி பெண்ணை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com