மும்பை பெண்ணை குஜராத்துக்கு கடத்திச் சென்று கற்பழித்த கும்பல்

புனிதத்தலங்களை சுற்றிக் காட்டுவதாக ஏமாற்றி மும்பை பெண்ணை குஜராத்துக்கு கடத்திச் சென்று கற்பழித்த கும்பலை சேர்ந்த மூன்றுபேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை பெண்ணை குஜராத்துக்கு கடத்திச் சென்று கற்பழித்த கும்பல்
Published on

மும்பை:

மும்பை அருகேயுள்ள பால்கர் பகுதியை சேர்ந்த சுமார் 31 வயது திருமணமான பெண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ள கோவில்களை சுற்றிக்காட்டுவதாக கடந்த மூன்றாம் தேதி இருவர் அழைத்து சென்றனர். அந்தப் பெண் காணாமல் போனதை அறிந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் உள்ள வீட்டில் அந்தப் பெண்ணை அடைத்துவைத்திருந்தபோது அங்கிருந்த மூன்றாவது நபர் அவரை பலவந்தமாக கற்பழித்தார். மேலும், மூவரும் சேர்ந்து அவரை வேறொரு நபருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்கவும் பேரம் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

அவர்களின் பிடியில் இருந்து தப்பிவந்த அந்தப் பெண் கடந்த 11-ம் தேதி மும்பை திரும்பினார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com