திருமானூர் அருகே பெண் என்ஜினீயர் தற்கொலை

திருமானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பாளையபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் அபிநயா (வயது 24). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு நடைபெற்ற போதிலும் தொடர்ந்து அங்கு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பாளையபாடிக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில்சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். 

இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபிநயாவுக்கு தனியார் மென் பொருள் பணியாற்றியபோது, வேலைப்பளு அதிகமாக இருந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com