திருமணமான 3 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை

புதுவை அருகே திருமணமான 3 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேதராப்பட்டு:

புதுவை அருகே உள்ள இடையன் சாவடியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் பவானி (வயது 22). பி.இ. முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

3 மாதங்களுக்கு முன்பு அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

நேற்று வீட்டில் இருந்த பவானி திடீரென வீட்டின் பின்பக்கம் சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. எனவே, அவரது குடும்பத்தினர் அவரை தேடிச்சென்றனர்.

அப்போது கொல்லைப்புறத்தில் இருந்த பூவரசன் மரத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டு இருந்தார். அவரை அவசரமாக இறக்கினார்கள். ஆனால், அதற்குள் அவர் இறந்து விட்டார்.

ஆரோவில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி தெரியவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com