போலி பாஸ்போர்ட் மூலம், துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது

நடன நிகழ்ச்சி நடத்துவதற்காக போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது செய்யப்பட்டார்.
போலி பாஸ்போர்ட் மூலம், துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது
Published on

சென்னை:

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் துணை நடிகை மமதா(வயது 20). இவர் நடன நிகழ்ச்சி நடத்துவதற்காக பல முறை துபாய் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த 20-ந் தேதி அன்று துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் நடிகை மமதாவிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மமதாவின் பாஸ்போர்ட் போலியானது என்று கண்டறியப்பட்டது. அவர் தனது பெயரை குஷ்பு என்றும், காஞ்சீபுரம் அருகே உள்ள கலாகாட்டூர் என்ற ஊரில் வசிப்பதாக போலியான ஆவணங்கள் தயாரித்து சமர்ப்பித்து அவர் போலியான பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். துணை கமிஷனர் செந்தில் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

துணை நடிகை மமதா நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு போலி பாஸ்போர்ட் வாங்கி கொடுத்த நபர் கள் யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. கர்நாடகா மாநிலம், கோலார் பகுதிதான் மமதாவின் சொந்த ஊராகும். இவர், பிழைப்புக்காக சென்னை வந்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com