ஊட்டி அருகே தாய்-மகள் தற்கொலை செய்தது ஏன்?: பரபரப்பு தகவல்

நோய் குணமாகாததால் மகளுடன் தாய் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊட்டி அருகே தாய்-மகள் தற்கொலை செய்தது ஏன்?: பரபரப்பு தகவல்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கொல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவகி (65). இவர்களது மகள் பிரமிளா(35). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

நேற்று மதியம் தாயும், மகளும் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது இருவரும் வி‌ஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி தேவகி, அவரது மகள் பிரமிளா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து சேரம்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரமிளாவுக்கு ரத்த சோகை நோய் இருந்ததும் பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com