இரானி கோப்பை- முச்சதத்துடன் சாதனைகளையும் தவற விட்ட வாசிம் ஜாபர்

இரானி கோப்பை போட்டியில் விதர்பா வீரர் வாசிம் ஜாபர் முச்சதம் அடிக்கு வாய்ப்புடன் சாதனைகளையும் தவறவிட்டார். #IraniCup
இரானி கோப்பை- முச்சதத்துடன் சாதனைகளையும் தவற விட்ட வாசிம் ஜாபர்
Published on

இவரது இரட்டை சதத்தால் விதர்பா 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 598 ரன்கள் குவித்திருந்தது. வாசிம் ஜாபர் 285 ரன்களுடனும், வான்கடே 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய 3-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்த காரணத்தில் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மழை நின்று மைதானம் தயார் ஆனதும் மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது.

285 ரன்கள் எடுத்திருந்த வாசிம் ஜாபர் இன்றைய ஆட்டத்தில் மேலும் ஒரு ரன்கள் மட்டும் எடுத்து 286 ரன்னில் ஆட்டமிழந்தார். 14 ரன்களில் முச்சதத்தை தவறவிட்ட வாசிம் ஜாபர், பல சாதனைகளையும் தவறவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com