வாலாஜாவில் அரசு பெண்கள் பள்ளி அருகே மது குடித்த தொழிலாளிக்கு அடி-உதை

வாலாஜாவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மது குடித்த தொழிலாளியை பொது மக்கள் அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மது குடித்த தொழிலாளிக்கு அடி-உதை
மது குடித்த தொழிலாளிக்கு அடி-உதை
Published on

வாலாஜா:

வாலாஜாவை சேர்ந்தவர் முத்து (வயது 62). வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கூடை பின்னும் தொழில் செய்துவருகிறார். இன்று காலை பள்ளி முன்பு உள்ள பெட்டிக் கடையில் அமர்ந்து மது குடித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் அவர்கள் முத்துவை அடித்து உதைத்தனர். மேலும் இதுபற்றி வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

முத்துவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வாலாஜாவில் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி பகுதிகளில் மது அருந்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com