வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

வாலாஜா:

வாலாஜா அடுத்த அனந்தலையை சேர்ந்தவர் குமார் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். இவரது இளைய மகன் கார்த்திகேயன் (வயது8).கார்த்திகேயன் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகேயன் தனது அண்ணன் சந்தோஷ் உடன் அனந்தலை ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.

கார்த்திகேயன் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

இதனைக்கண்ட சந்தோஷ் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து தகவல் தெரிவித்தார்.

குமார் மற்றும் அவரது உறவினர்கள் ஏரியில் மூழ்கிய கார்த்திகேயனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் கார்த்திகேயன் பிணமாக மீட்கப்பட்டார் .

இதுகுறித்து கார்த்திகேயன் தாயார் மோகனா வாலாஜா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com