வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.
மருத்துவமனை
மருத்துவமனை
Published on

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே 80 படுக்கைகள் வசதி கொண்ட தனிமை சிகிச்சை கண்காணிப்பு வார்டு தனிகட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிதாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த புதிய கட்டிடத்தில் சுமார் 70 படுக்கைகள் வசதிகள் கொண்டதாகும். இதில் சளி, காய்ச்சல், உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு சிகிச்சைகளை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்க்கான வேலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரிதமாக பணிகள் மேற்கொண்டு ஓரீரு வாரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மருத்துவ கண்காணிப்பாளர் சிங்காரவேலன், மாவட்ட தொடர்பு அலுவலர் பிரகாஷ் அய்யப்பன், தனிமை வார்டு பிரிவு டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com