வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை

வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

பெரம்பூர்:

வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் கோகுல் என்கிற கோகுல்ராஜ் ‘23). இவர் மீது அடி, தடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கோகுல்ராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜையா என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. அவரை கோகுல்ராஜ் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் ரவுடியாக வலம வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு 10.30 மணிக்கு கோகுல்ராஜ் வியாசர்பாடி, கல்யாணபுரம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்தது.

கோகுல்ராஜ் மீது அரிவாள், கத்தி, கம்பி ஆகியவற்றால் சரமாரி தாக்குதல் நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த கோகுல்ராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கு காரணமான 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜூக்கு மீனா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com