வியாசர்பாடியில் மூதாட்டி கொலை- நகைகள் கொள்ளை

வியாசர்பாடியில் மூதாட்டி கொலை செய்யப்பட் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

ராயபுரம்:

வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து வள்ளியம்மாள் மகள் சாந்தியுடன் வசித்த வந்தார்.

நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். வள்ளியம்மாள் மட்டும் தனியாக இருந்தார். இரவு அவர்கள் திரும்பி வந்த போது வள்ளியம்மாள் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன.

மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது. வள்ளியம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வந்த மர்ம கும்பல் அவரை கொன்று நகை - பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து வள்ளியம்மாளின் பேரன் சுரேஷ் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்து உள்ளன.

ஓட்டேரி, சேமாத்தம்மன் புதிய காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தன்ராஜ் (32) நேற்று முன்தினம் இரவு 8 பேர் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த அஜய், திலக் ராஜ், விக்கி, பால்பிரவீன், சாமுவேல், வினோத் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்பேடு மேம்பாலம் அருகே கூவம் கரையோரம் நேற்று காலை மதுரையை சேர்ந்த தனசேகர் (42) பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். நண்பரின் தாயிடம் தவறாக பேசியதால் இந்த கொலை நடந்து இருந்தது.

இது தொடர்பாக தனசேகரின் நண்பர் கோயம்பேடு நியூ காலனியை சேர்ந்த ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.

காசிமேடு இந்திரா நகரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சொரிகுப்பன் (60) நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். கஞ்சா விற்பதை தட்டிக்கேட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அப்ரு சுரேஷ், கூட்டாளிகள் சம்பத், ராகேஷ், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com