

புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்து பீச்சர்போன் வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக்டைம் வழங்குகின்றன.
புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் வாங்கும் பீச்சர்போன்களுக்கு ரூ.900 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆகஸ்டு 25-ம் தேதி முதல் துவங்கிய இந்த சலுகை ஐடெல் பீச்சர் போன்களை வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐடெல் நிறுவனத்தின் பீச்சர்போன்களை வாங்கும் அனைவருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
ஐடெல் பீச்சர்போன் வாங்கியதும், வாடிக்கையாளர்கள் ரூ.100க்கும் அதிகமான தொகையை செலுத்தி ரிசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ரூ.50 வரை டாக்டைம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் புதுவித தொழில்நுட்பம் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். ஐடெல் நிறுவன பீச்சர்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வோடபோன் வழங்கும் கேஷ்பேக் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். வோடபோன் நிறுவன சேவையுடன் எங்களது பீச்சர்போன்கள் கிடைப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.' என ஐடெல் நிறுவன சுதிர் குமார் தெரிவித்துள்ளார்.
புதிய சலுகை வோடபோனின் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் புதிய பீச்சர்போன் வாங்கும் போது கேஷ்பேக் சலுகையை 18 மாதங்களுக்கு பெற முடியும். அதிகபட்சமாக ரூ.900 வரையிலான கேஷ்பேக் தொகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.