விருத்தாசலம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல்

விருத்தாசலம் அருகே வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. #Gutkhaseized #LSPolls
பறிமுதல் செய்த குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.
பறிமுதல் செய்த குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.
Published on

விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி லெனின் தலைமையினான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதி வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 12 மூட்டைகள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடன் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஆட்டோவை குட்கா மூட்டைகளுடன் பறிமுதல் செய்து விருத்தாசலம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தாசில்தார் கவியரசு அதிகாரி லெனினிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

உடன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விருத்தாசலம் போலீசார் பறிமுதல் செய்த இடம் விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிக்கு அப்பாற்பட்ட இடம் எனக் கூறினார்கள். இதனால் நிலையான கண்காணிப்புக்குழு ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் விளாங்காட்டூர் தாமோதரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். #Gutkhaseized #LSPolls

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com