சர்ச்சை பகுதியில் வீர உரை - வைரலாகும் இந்திரா காந்தி புகைப்படம்

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களுடன் உரையாற்றிய போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்திரா காந்தியின் வைரல் புகைப்படம்
இந்திரா காந்தியின் வைரல் புகைப்படம்
Published on

இந்தியா சீனா இடையே எல்லை விவகாரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மலை பகுதியில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளுடன் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. வைரல் பதிவு காங்கிரஸ் கட்சி பெயரில் செயல்பட்டு வரும் பல்வேறு அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படம் இந்திரா காந்தி கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய போது எடுக்கப்பட்டதாக அவற்றில் கூறப்பட்டுள்ளது.  

வைரல் புகைப்படத்தை இணையத்தில் ஆய்வு செய்த போது, இந்த புகைப்படம் உண்மையில் 1971 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள லே பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இது கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

அந்த வகையில் வைரல் புகைப்படம் கல்வான் பள்ளத்தாக்கில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. வைரல் புகைப்படம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் எடுத்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com