வில்லுக்குறியில் 9-ம் வகுப்பு மாணவர் மாயம்- போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

வில்லுக்குறியில் பள்ளிக்கூடம் சென்ற 9-ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்லுக்குறியில் 9-ம் வகுப்பு மாணவர் மாயம்- போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
Published on

நாகர்கோவில்:

வில்லுக்குறி குதிரைபன்றிவிளையை சேர்ந்தவர் ஷீபாரோஸ் (வயது 34). இவரும் இவரது உறவினர்களும் இன்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர். 

அதில், எனது மகன் அஜின் 9-ம்  வகுப்பு மாணவன். அவன் கடந்த 22-ந் தேதி பள்ளிக்கூடத்திற்கு சென்றவன் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில தேடியும் அவன் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. எனவே இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்தோம். ஆனாலும் எனது மகன் பற்றிய எந்த தகவல் கிடைக்கவில்லை. எனவே அவனை உடனே கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com