வில்லாபுரம் அருகே ஷேர்ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி

வில்லாபுரம் அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
வில்லாபுரம் அருகே ஷேர்ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி
Published on

மதுரை:

மதுரை தெற்குவாசல் நல்லதம்பிதோப்பு மகாலிங்கம் சாலையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது52).

இவர் நேற்று இரவு ஷேர்ஆட்டோவில் பயணம் செய்தார். ஆட்டோ டிரைவர் விக்னேஷ் குடிபோதையில் இருந்துள்ளார். அவர் வேகமாக ஷேர்ஆட்டோவை ஓட்டிவந்தபோது எதிர் பாராதவிதமாக வில்லாபுரம் மெயின்ரோட்டில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் ரமேஷ், பெருங்குடி ராமகிருஷ்ணன் (39), இருளாயி (34) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து மதுரை டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com