போலீஸ் உளவாளி என்று குற்றம்சாட்டி கிராமவாசியை அடித்துக் கொன்று நக்சலைட்கள் அட்டூழியம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்ட கிராமவாசியை பிரம்புகளால் அடித்துக் நக்சலைட்கள் கொன்றுள்ளனர்.
போலீஸ் உளவாளி என்று குற்றம்சாட்டி கிராமவாசியை அடித்துக் கொன்று நக்சலைட்கள் அட்டூழியம்
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை வேட்டையாட நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்ததாக குற்றம்சாட்டி கடந்த சனிக்கிழமை மாடேபாபு ராவ் என்ற கிராமவாசியை நக்சலைட்கள் பிடித்து சென்றனர். நக்சலைட்களின் பஞ்சாயத்து மன்றத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்றிரவு மாடேபாபு ராவை பல நக்சலைட்கள் ஒன்றாக சூழ்ந்து கொண்டு லத்தி மற்றும் பிரம்புகளால் அடித்துக் கொன்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com