வெங்கல் அருகே கோவில் குளத்தை கிராம மக்கள் தூர் வாரினர்

வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தில் தர்மராஜர் கோவில் குளத்தை உழவர் மன்றங்கள், செம்பேடு ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து கிராம மக்கள் சீரமைத்தனர்.
வெங்கல் அருகே கோவில் குளத்தை கிராம மக்கள் தூர் வாரினர்
Published on

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தில் தர்மராஜர் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான குளம் முட்கள் சூழ்ந்து பொதுமக்கள் அருகே செல்ல முடியாத நிலையில் இருந்தது.

கோவில் குளத்தில் பருவ மழையின் போது பெய்யும் மழை தண்ணீரை சேமிக்கவும், சுகாதாரத்தை பேணிக்காக்கும் பொருட்டும் குளத்தை கிராம மக்கள் சீரமைக்க முடிவு செய்தனர்.இதையடுத்து தந்தை பெரியார் உழவர் மன்றம், பாரதியார் உழவர் மன்றம், வ.உ.சிதம்பரனார் உழவர் மன்றம், செம்பேடு ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து கிராம மக்கள் குளத்தை சீரமைத்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com