விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து ஆசிரியர் பலி
Published on

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள வா.பகண்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 62). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்றார்.

அங்குள்ள கரும்பு தோட்டத்தை பார்வையிட செல்லும்போது கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக குமார் மிதித்து விட்டார்.

இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குமாரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com