கீழ்பென்னாத்தூரில் தே.மு.தி.க. மாவட்ட பொறுப்பாளர் இல்ல திருமணம்: விஜயகாந்த் நேரில் வாழ்த்து

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தே.மு.தி.க பொறுப்பாளர் இல்ல திருமணம் நடந்தது. தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கீழ்பென்னாத்தூரில் தே.மு.தி.க. மாவட்ட பொறுப்பாளர் இல்ல திருமணம்: விஜயகாந்த் நேரில் வாழ்த்து
Published on

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தே.மு.தி.க பொறுப்பாளர் வி.எம்.நேரு, தமிழ்ச்செல்வி இவர்களின் மகன் மணிகண்டனுக்கும், சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த கண்ணப்பன், தேவி இவர்களின் மகள் ஜீவிதாவிற்கும், கீழ்பென்னாத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள சங்கீத மஹாலில் திருமண நடந்தது.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களிடம் மாங்கல்யம் எடுத்து கொடுத்தார். மணமகன் மணிகண்டன், ஜீவிதா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் விஜயகாந்த் மணமக்களை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார்.

மணவிழாவில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு மணமகன் தந்தையும் தே.மு.தி.க. மாவட்ட பொறுப்பாளருமான நேரு வெள்ளியால் ஆன செங்கோல் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் இருந்து வந்த பிரசாதங்களை விஜயகாந்துக்கும், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷிக்கும் வழங்கப்பட்டது.

தலைமை கழக பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, செயலாளர்கள் உமாநாத், ஜாகீர் உசேன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், திருவண்ணா மலை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஸ்ரீ.குமரன், துணை செயலாளர் சிவசங்கர், லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலாஜி, பன்னீர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், தமிழன்னை பாபு, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் சங்கர், கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் ரமேஷ், அவைதலைவர் முத்துகிருஷ்ணன், துணை செயலாளர்கள் கமருதீன், அன்பு, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் நடந்த மணமக்கள் வரவேற்பு விழாவில் முன்னாள் தி.மு.க. அமைச்சரும், சட்டசபை துணை கொறடாவுமான பிச்சாண்டி, திருவண்ணா மலை முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதர், செங்கம் மு.பெ.கிரி, கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் அன்பு மற்றும் பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com