ஸ்ரீவில்லிபுத்தூரில் முகநூலில் மோடி குறித்து அவதூறு: விஜய் ரசிகர் கைது

பிரதமர் மோடியை முகநூலில் விமர்சித்த விஜய் ரசிகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் முகநூலில் மோடி குறித்து அவதூறு: விஜய் ரசிகர் கைது
Published on

விருதுநகர்:

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து பேசிய வசனத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தபடம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு இந்து முன்னணியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக விஜய் ரசிகர்களும், பா.ஜ.க. தொண்டர்களும் வலை தளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது முகநூல் பக்கத்தில் சச்சின் என்ற பெயரில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்த திருமுருகன் (வயது 19) என்பவரை கைது செய்தனர். விஜய் ரசிகரான இவர் தான் சச்சின் என்ற பெயரில் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com