கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யக் கோரி கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்திய காட்சி.
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்திய காட்சி.
Published on

கும்பகோணம்:

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யக் கோரி கும்பகோணம் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மண்டல செயலாளர் வக்கீல் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழருவி, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லை வளவன், இளைஞர் எழுச்சி பாசறை அமைப்பாளர் புரட்சியாளன், வக்கீல் அணி பாலா, நகர பொருளாளர் வீரமுத்து , நீலப்புலிகள் இயக்க தலைவர் வக்கீல் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் முருகப்பன் தலைமையில் பந்தல்லூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஊடக அணி முகமது இசாத், சக்தி சசிக்குமார். பாக்யராஜ். பிரகாஷ், கலியபெருமாள், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பந்தநல்லூர் -சீர்காழி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் பந்தநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருப்பனந்தாள், சோழபுரம் பகுதிகளில் வெண்மணி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் செய்தனர். விடுதலை தமிழ்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தை.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com