மதுரையில் விடுதலை சிறுத்தைகள் மறியல் - 100 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

மதுரை:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அம்பேத்காரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதைக்கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்- மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை தல்லாகுளம் அருகிலுள்ள அம்பேத்கார் சிலை உள்ளது. இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் பெண்கள் உட்பட 82 பேரும், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அழகுபாண்டி தலைமையில் 20 பேரும் திரண்டனர். ஆர்ப்பாட்டம் நட்த்திய அவர்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மறியல் செய்த 102 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com