தெலுங்கானா: பிளேடால் கையை வெட்டி கால்நடை மருத்துவ மாணவன் தற்கொலை முயற்சி

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவம் படித்து வரும் மாணவன், பிளேடால் கையை வெட்டி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா: பிளேடால் கையை வெட்டி கால்நடை மருத்துவ மாணவன் தற்கொலை முயற்சி
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ராஜேந்திரா நகரில் பி.வி.நரசிம்மராவ் கால்நடை மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் வாரங்கல் பகுதியை சேர்ந்த தருண், இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தருண் அறையின் கதவை சக நண்பர்கள் தட்டிப் பார்த்துள்ளனர். அப்போது அவர் பிளேடால் கையை வெட்டி ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். உடனடியாக அவரை நிஜாம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருண் போதை பழக்கத்துக்கு ஆளாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com