வேப்பம்பட்டு அருகே சிக்னல் கோளாறு: சென்னை மின்சார ரெயில்கள் தாமதம்

வேப்பம்பட்டு-திருநின்றவூர் இடையே இன்று காலை 2.15 மணியளவில் திருவள்ளூர்-சென்னை மார்க்கத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
வேப்பம்பட்டு அருகே சிக்னல் கோளாறு: சென்னை மின்சார ரெயில்கள் தாமதம்
Published on

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டு-திருநின்றவூர் இடையே இன்று காலை 2.15 மணியளவில் திருவள்ளூர்-சென்னை மார்க்கத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர், ஆவடியில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில்கள் நடுவழியில் நின்றதால் பயணிகள் கீழே இறங்கி அருகில் உள்ள பஸ் நிலையத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி- கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

காலை 9.45 மணியளவில் சிக்னல் சரி செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து சென்னை மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com