வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய ஆட்டோ டிரைவர் கைது

வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய ஆட்டோ டிரைவர் கைது
Published on

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள அமணம்பாக்கம் வருவாய் அலுவலர் அலுவலகம் எதிரே பெரியபாளையம்-ஆவடி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் வேகமாக ஓட்டி சென்றார்.அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர் திருவள்ளூரை அடுத்த பேரத்தூர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபி என்பதும் விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து ½கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com