வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி

வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி
Published on

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள பெருமுடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது39). தாமரை பாக்கம் கூட்டுச்சாலையில் ‘ஹார்டுவேர்ஸ்’ கடை நடத்தி வந்தார்.

நேற்று இரவு அவர் வழக்கம்போல் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

புன்னப்பாக்கம்-பெரு முடிவாக்கம் நெடுஞ்சாலையில் வளைவில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் ஆனந்த் மோட்டார் சைக்கிளை திடீர் என்று பிரேக் போட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ஆனந்த் பலியானார்.

தகவல் அறிந்ததும் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com